3 டெல்லி மாநகராட்சிகளை இணைக்கும் மசோதா - மத்திய மந்திரிசபை ஒப்புதல்


3 டெல்லி மாநகராட்சிகளை இணைக்கும் மசோதா - மத்திய மந்திரிசபை ஒப்புதல்
x
தினத்தந்தி 23 March 2022 12:54 AM IST (Updated: 23 March 2022 12:54 AM IST)
t-max-icont-min-icon

3 டெல்லி மாநகராட்சிகளை இணைக்கும் மசோதாவுக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது.

புதுடெல்லி,

டெல்லி மாநகராட்சி கடந்த 2011-ம் ஆண்டு, வடக்கு மாநகராட்சி, தெற்கு மாநகராட்சி, கிழக்கு மாநகராட்சி என மூன்றாக பிரிக்கப்பட்டது. அப்போதிலிருந்து, 3 மாநகராட்சிகளும் பா.ஜனதாவின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகின்றன.

3 மாநகராட்சிகளிடையே வருவாயில் ஏற்றத்தாழ்வு காணப்படுகிறது. வார்டுகளும் சமமாக பிரிக்கப்படவில்லை. நிதி தட்டுப்பாடு காரணமாக, ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை காணப்படுகிறது.

இந்நிலையில், 3 மாநகராட்சிகளையும் மீண்டும் ஒன்றாக இணைப்பதற்கான டெல்லி மாநகராட்சி திருத்த மசோதாவுக்கு மத்திய மந்திரிசபை நேற்று ஒப்புதல் அளித்தது. ஒன்றாக இணைப்பதன் மூலம், பா.ஜனதா-ஆம் ஆத்மி இடையிலான அரசியல் மோதல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story