கேரளா: திருமணமான மறுநாளே மணமகன் தற்கொலை செய்து கொண்ட சோகம்..!


கேரளா: திருமணமான மறுநாளே மணமகன் தற்கொலை செய்து கொண்ட சோகம்..!
x

திருமணமான மறுநாள் புது மணமகன் காயலில் குதித்து தற்கொலை செய்துகொண்ட நிலையில் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கேரளா,

கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம் ஒல்லூர் பகுதியில் உள்ளது மனக்கொடி. இங்கு வசித்து வருபவர் சிவசங்கரன் மகன் தீரஜ் (37). இவருக்கும் திருச்சூர் மாவட்டம் மாரோட்டி என்ற இடத்தில் வசிக்கும் ஒரு இளம் பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களுடைய திருமணம் கடந்த திங்கட்கிழமை காலை 10 மணி அளவில் நடைபெற்றது. 

இதற்காக இவர் துபாயில் இருந்து பத்து நாள் விடுமுறையில் சொந்த ஊர் வந்திருந்தார். இந்நிலையில் திங்கட்கிழமை நடைபெற்ற இரவு நேர வரவேற்பில் சில கைகலப்புகள் நடந்துள்ளது. இதனால் தீரஜ் மனம் வருந்தியபடி காணப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து நேற்று காலை தீரஜ் மனைவி வீட்டிலிருந்து மணிக்கொடி என்ற இடத்தில் இருக்கும் தனது வீட்டுக்கு சென்று வருவதாக கூறி ஸ்கூட்டரில் சென்றுள்ளார்.

ஆனால் சென்று வெகு நேரமாகியும் இவர் பற்றி எந்த ஒரு தகவலும் தெரியவில்லை. இந்நிலையில் நேற்று மாலை 4 மணி அளவில் சேர்வா என்ற பகுதியில் உள்ள காயலில் மீன்பிடித் தொழிலாளர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது இவர்கள் வலையில் தீரஜின் இறந்த உடல் சிக்கியுள்ளது. 

இதைகண்டு அதிர்ச்சியடைந்த மீன் தொழிலாளர்கள் ஒல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் தீயணைப்புப் படை வீரர்களுடன் விரைந்து வந்து உடலை மீட்டு திருச்சூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றுள்ளார்கள். 

திங்கட்கிழமை இரவு நடைபெற்ற கைகலப்பு சம்பவம் திரஜை பாதித்து உள்ளது. அதனால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என முதல்கட்ட விசாரணையில் தெரிய வருகிறது, என்று போலீசார் தெரிவித்தனர். ஆனால் அது மட்டுமே காரணமா அல்லது வேறு ஏதாவது காரணம் உண்டா என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமான மறுநாளே மணமகன் தற்கொலை செய்து கொண்டது, உறவினர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


Next Story