பிரதமர் மோடியை பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் நாளை சந்திக்கிறார்
பிரதமர் மோடியை பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் நாளை (24-ம் தேதி) டெல்லியில் சந்திக்க உள்ளார்.
புதுடெல்லி,
பஞ்சாப் சட்டசபை தேர்தலில் அபாரமாக வெற்றிப் பெற்று காங்கிரஸ், பாஜகவை ஓரங்கட்டி ஆம் ஆத்மி முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தது. கடந்த 16-ம் தேதி சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங்கின் பூர்வீக கிராமமான கட்கர் கலனில் ஏற்பாடு செய்யப்பட்ட பிரமாண்ட விழாவில் பஞ்சாப் முதல்-மந்திரியாக பகவந்த் மான் பதவியேற்றார்.
இந்நிலையில், பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை வரும் 24-ம் தேதி (நாளை) சந்திக்க உள்ளார். பஞ்சாப் முதல்-மந்திரியாக பதவியேற்ற பிறகு பிரதமர் மோடியை பகவந்த் மான் முதல்முறையாக சந்திக்கவுள்ளார்.
இந்த சந்திப்பு வரும் நாளை (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story