ராமர் பாலம் வழக்கு: சில வாரங்கள் கழித்து விசாரிக்கப்படும் - சுப்ரீம் கோர்ட்டு
ராமர் பாலத்தை பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக்கோரிய வழக்கு சில வாரங்கள் கழித்து விசாரிக்கப்படும் என சுப்ரீம் கோர்ட்டு தகவல் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக்கோரிய வழக்கு சில வாரங்கள் கழித்து விசாரணைக்கு பட்டியலிடப்படும் என சுப்ரீம் கோர்ட்டு தகவல் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு முன் ஆஜரான சுப்பிரமணியன் சுவாமியிடம், ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக்கோரிய வழக்கை விசாரிப்பதற்கான நீதிபதிகள் அமர்வை ஏற்படுத்துவதில் சில சிக்கல்கள் உள்ளன. சில வாரங்கள் கழித்து விசாரணைக்கு பட்டியலிடப்படும். அதுவரை பொறுத்திருங்கள் என தெரிவித்தார்.
ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக்கோரிய வழக்கை மார்ச் 9-ந்தேதி விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு முடிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story