இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.சி.லஹோட்டி காலமானார்
இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி ரமேஷ் சந்திர லஹோட்டி நேற்று மாலை காலமானார்.
புதுடெல்லி,
இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி ரமேஷ் சந்திர லஹோட்டி நேற்று மாலை மருத்துவமனையில் காலமானார் என்று அவருடைய குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவருக்கு வயது 81.
நீதிபதி லஹோட்டி ஜூன் 1, 2004 அன்று இந்தியாவின் 35-வது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். நவம்பர் 1, 2005 அன்று அவர் ஓய்வு பெற்றார். நவம்பர் 1, 1940 இல் பிறந்த அவர் 1962-ல் வழக்கறிஞராகச் சேர்ந்தார். ஏப்ரல் 1977-ல் நேரடியாக பெஞ்சில் பணியமர்த்தப்பட்டார்.
1988 ஆம் ஆண்டு மே 3-ந்தேதி மத்தியப்பிரதேச ஐகோர்ட்டின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட அவர், அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 4-ந்தேதி நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பிப்ரவரி 7, 1994-ல் டெல்லி ஐகோர்ட்டிற்கு மாற்றப்பட்டார், பின்னர் டிசம்பர் 9, 1998-ல் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
Related Tags :
Next Story