ஏப்ரல் 1-ந் தேதி முதல் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் அங்க பிரதட்சணம் செய்ய அனுமதி


ஏப்ரல் 1-ந் தேதி முதல் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் அங்க பிரதட்சணம் செய்ய அனுமதி
x
தினத்தந்தி 24 March 2022 2:54 AM IST (Updated: 24 March 2022 2:54 AM IST)
t-max-icont-min-icon

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஏப்ரல் 1-ந் தேதி முதல் பக்தர்கள் அங்க பிரதட்சணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 1-ந் தேதி முதல் சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, நிஜபாத தரிசனம், கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை உள்ளிட்ட ஆர்ஜித சேவையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இதன் ஒரு பகுதியாக ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கான தரிசன டிக்கெட், ஆர்ஜிதசேவை டிக்கெட்டுகள் கடந்த 20-ந் தேதி ஆன்லைனில் வெளியிடப்பட்டு பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் திருமலையில் உள்ள சி.ஆர்.ஓ. அலுவலகத்தில் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் குலுக்கல் முறையில் வழங்கப்படும், இதற்காக ஒரு நாள் முன்னதாக காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பக்தர்கள் பதிவு செய்தால், தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு டிக்கெட் வழங்கப்படும்.

அதேபோன்று வருகிற 1-ந் தேதி முதல் பி.ஏ.சி-1-ல் பக்தர்களுக்கு அங்கப்பிரதட்சணம் செய்வதற்கான டோக்கன்கள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story