இந்தியாவில் முதல்முறையாக ரூ.100 கோடிக்கு ஹெலிகாப்டர் வாங்கிய தொழிலதிபர்...!
உலகிலேயே ஒட்டுமொத்தமாக 1,500 ஏர்பஸ் எச் 145 ரக ஹெலிகாப்டர்கள் மட்டுமே தற்போது உள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவின் மிக முக்கிய தொழிலதிபர்களில் ஒருவர் ரவி பிள்ளை, 68. இவர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர். ஆர்பி குரூப்ஸின் சேர்மேனான இவர் நிறுவனத்தின் கீழ் சுமார் 70 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பணி புரிந்து வருகின்றனர். இவரின் சொத்து மதிப்பு 2.5 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.
இவர் தற்போது இந்தியாவிலே முதல் ஆளாக ஏர்பஸ் எச் 145 ரக ஹெலிகாப்டரை வாங்கி உள்ளார். இந்திய ரூபாய் மதிப்பில் இந்த ஹெலிகாப்டரின் விலை சுமார் ரூ.100 கோடியாகும்.
உலகிலேயே ஒட்டுமொத்தமாக 1,500 எச் 145 ஹெலிகாப்டர்கள் மட்டுமே தற்போது இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த ஹெலிகாப்டரில் ஒரே நேரத்தில் ஏழு நபர்கள் வரை பயணிக்க முடியும். இது 20 ஆயிரம் அடிக்கும் அதிகமான உயரம் வரை பறக்கும் திறன் கொண்டதாகும்.
Related Tags :
Next Story