ரெயில்வே துறையை தனியார் மயமாக்கும் திட்டம் இல்லை - மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ்


image courtesy: ANI
x
image courtesy: ANI
தினத்தந்தி 25 March 2022 12:39 AM IST (Updated: 25 March 2022 12:39 AM IST)
t-max-icont-min-icon

ரெயில்வே துறையை தனியார் மயமாக்கும் திட்டம் இல்லை என்று மத்திய ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் மாநிலங்களவையில் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

இந்திய ரெயில்வே துறையை தனியார்மயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் மாநிலங்களவையில் நேற்று கூறினார்.

ரெயில்வே துறையை தனியார்மயமாக்கும் திட்டத்தை மத்திய அரசு பரிசீலிக்கக்கூடாது என்று மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து பதிலளித்த, ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், இந்திய ரெயில்வே துறையின் திறமையான செயல்பாட்டை எளிதாக்குவதற்கு அனைத்து மாநிலங்களும் மத்திய அரசுடன் ஒத்துழைக்க வேண்டும் என்று கூறினார்.

ரெயில் நிலையங்கள், ரெயில் பாதைகள், சிக்னல் அமைப்பு, ரெயில் பெட்டிகள் என அனைத்தும் இந்திய அரசுக்கு சொந்தமானது. ரெயில்வே துறையை தனியார் மயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று கூறினார். 

Next Story