அரசு கொள்முதல் இணையதளத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு..!


அரசு கொள்முதல் இணையதளத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு..!
x
தினத்தந்தி 25 March 2022 12:52 AM IST (Updated: 25 March 2022 12:52 AM IST)
t-max-icont-min-icon

அனைத்து அரசு கொள்முதல் இணையதளத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

அனைத்து மத்திய அரசு துறைகள் மற்றும் அமைச்சகங்கள் ஆன்லைனில் பொருட்களை கொள்முதல் செய்வதற்காக, கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ‘கவர்ன்மெண்ட் இ-மார்க்கெட்பிளேஸ்’ என்ற அரசு கொள்முதல் இணையதளம் தொடங்கப்பட்டது.

இந்த இணையதளத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட ‘டுவிட்டர்’ பதிவில் கூறியிருப்பதாவது:-

‘கவர்ன்மெண்ட் இ-மார்க்கெட்பிளேஸ்’ ஒரே ஆண்டில் ரூ.1 லட்சம் கோடி மதிப்புக்கு ஆர்டர் பெற்றிருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். இது முந்தைய ஆண்டுகளை விட கணிசமான முன்னேற்றம் ஆகும்.

இதில், 57 சதவீத ஆர்டர் மதிப்பு, சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களிடம் இருந்து கிடைத்துள்ளது. அந்த நிறுவனங்களுக்கு இணையதளம் அதிகாரம் அளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story