தேசிய பங்கு சந்தை முறைகேடு: ஆனந்த் சுப்பிரமணியனுக்கு ஜாமீன் மறுப்பு


தேசிய பங்கு சந்தை முறைகேடு: ஆனந்த் சுப்பிரமணியனுக்கு ஜாமீன் மறுப்பு
x
தினத்தந்தி 25 March 2022 1:18 AM IST (Updated: 25 March 2022 1:18 AM IST)
t-max-icont-min-icon

தேசிய பங்கு சந்தை முறைகேடு வழக்கில் ஆனந்த் சுப்பிரமணியனின் ஜாமீனுக்கு டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

தேசிய பங்கு சந்தை முறைகேடு வழக்கில் ஜாமீன் கேட்டு ஆனந்த் சுப்பிரமணியன் டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் தாக்கல் செய்தார். இந்த மனுவை கோர்ட்டு நீதிபதி சஞ்சீவ் அகர்வால் விசாரித்தார்.

மனுதாரர் சார்பில் வக்கீல்கள் ஹர்ஷ்தீப் சிங், விஷ்ணு மோகன் ஆஜராகி ஜாமீன் வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர். இதற்கு அரசுத் தரப்பு வக்கீல் வி.கே.பாதக் ஆட்சேபம் தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் பரிசீலித்த நீதிபதி சஞ்சீவ் அகர்வால், தேசிய பங்கு சந்தை முறைகேடு வழக்கில் ஆனந்த் சுப்பிரமணியனுக்கு ஜாமீன் வழங்க மறுத்து, அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story