நாடு முழுவதும் 107 ராணுவ தளவாடங்கள் இறக்குமதிக்கு தடை
107 ராணுவ தளவாடங்கள் இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்க ராணுவ அமைச்சகம் நேற்று ஒப்புதல் அளித்தது.
புதுடெல்லி,
இந்தியாவில் போர்க்கப்பல்கள், ஹெலிகாப்டர்கள், பீரங்கிகள், ராணுவ போர் வாகனங்கள், ஏவுகணைகள், ரேடார்கள் ஆகியவற்றின் 107 உதிரி பாகங்கள், துணை கருவிகள் ஆகியவற்றை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்க ராணுவ அமைச்சகம் நேற்று ஒப்புதல் அளித்தது.
வருகிற டிசம்பர் மாதம் முதல் 2028-ம் ஆண்டு டிசம்பர் மாதம்வரை இந்த தடை அமலில் இருக்கும். இந்த பொருட்கள், இந்திய நிறுவனங்களிடம் இருந்து மட்டுமே கொள்முதல் செய்யப்படும். பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் தற்சார்பை அடையும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் உள்நாட்டிலேயே தயாரிக்க முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.
இதுபோல், 2 ஆயிரத்து 851 தளவாடங்கள் இறக்குமதிக்கு தடை விதித்து கடந்த ஆண்டு டிசம்பர் 27-ந் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது.
Related Tags :
Next Story