சீன வெளியுறவு மந்திரி வாங் யீ உடன் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை


சீன வெளியுறவு மந்திரி வாங் யீ உடன் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 25 March 2022 12:39 PM IST (Updated: 25 March 2022 12:39 PM IST)
t-max-icont-min-icon

டெல்லியில், சீன வெளியுறவு மந்திரி வாங் யீ உடன் இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

புதுடெல்லி,

கிழக்கு லடாக்கில், 2020 மே மாதத்தில் இருந்து இந்தியா, சீனா படைகள் இடையே மோதல் போக்கு உள்ளது. இரு நாட்டுப் படைகளும் அங்கு குவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக பல சுற்று பேச்சு நடந்தும், படைகள் முழுமையாக விலக்கி கொள்ளப்படவில்லை.

இந்நிலையில், சீன வெளியுறவுத் துறை மந்திரி வாங் யீ, திடீர் பயணமாக நேற்று டெல்லி வந்தார். இன்று காலை, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்து பேசினார். பின்னர், இந்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கரை, வாங் யீ சந்தித்தார். அப்போது இரு தரப்பு உறவுகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். எல்லை பிரச்சினை உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து   விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story