12-14- வயது சிறார்கள் 1 கோடிக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது: மத்திய அரசு
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி முழு வீச்சில் போடப்பட்டு வருகிறது.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி முழு வீச்சில் போடப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த 16 ஆம் தேதி 12-14-வயது வரம்பில் உள்ள சிறார்களுக்கும் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி கொடுத்தது. கோர்பவாக்ஸ் தடுப்பூசி மட்டும் சிறார்களுக்கு போட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இரண்டு தவணைகளைகாக போடப்படும் இந்த தடுப்பூசி 28 நாட்கள் கால இடைவெளியில் போடப்பட வேண்டும்.
நாடு முழுவதும் சிறார்களுக்கு தடுப்பூசி பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நாட்டில் இதுவரை 1 கோடிக்கும் மேற்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மண்டவியா தெரிவித்துள்ளார்.
நாட்டில் கடந்த ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி நிலவரப்படி 12- 14 வயது வரம்பில் 4.7 கோடி சிறார்கள் உள்ளதாக தரவுகள் உள்ளது. இந்தியாவில் ஒட்டுமொத்தமாக இதுவரை போடப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 182.55- கோடியை தாண்டியுள்ளது.
Related Tags :
Next Story