நாட்டில் எரிபொருள் விலை ஏற்றத்திற்கு போர்ச் சூழலும் ஒரு காரணம்- நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
39 சிறிய திருத்தங்களுடன் 2022- ஆம் ஆண்டுக்கான நிதி மசோதா இன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
புதுடெல்லி,
மக்களவையில் 2022- ஆம் ஆண்டுக்கான நிதி மசோதா இன்று நிறைவேறியது. இந்த மசோதா மீதான விவாதத்தில் பதிலளித்துப் பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாட்டில் எரிபொருள் விலை ஏற்றத்திற்கு உக்ரைன் போர்ச் சூழலும் ஒரு காரணம் என்றார்.
மேலும் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து நிர்மலா சீதாராமன் பேசுகையில், 1951- ஆம் ஆண்டு நாட்டின் உணவுப் பொருள் விலை உயர்வுக்கு கொரிய போரை அப்போதைய பிரதமர் நேரு சுட்டிக்காட்டியதையும் 1970- ஆம் ஆண்டு மறைந்த பிரதமர் இந்திரா காந்தி வருமான வரி விகிதத்தை கடுமையாக உயர்த்தியதையும் நினைவுகூர்ந்து பேசினார்.
பொருளாதார மீட்சிக்காகவும் கொரோனா பேரிடருக்காக செலவிட்டதற்காக வரியை பல வளர்ந்த நாடுகள் உயர்த்தியதாகவும் ஆனால் இந்தியா அதுபோல வரி எதையும் உயர்த்தவில்லை என்றும் எளிய மக்களின் சுமையை குறைப்பதில் அரசு உறுதியாக உள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் தனது பதிலுரையில் பேசினார்.
Related Tags :
Next Story