கொரோனா பாதிப்பு இல்லாத இடமாக மாறிய மும்பை ’தாராவி’
பாதிக்கப்பட்ட அனைவரும் குணமாகி, புதிதாக யாருக்கும் தொற்று கண்டறியப்படாததால் தாராவி கொரோனாவில் இருந்து முழுமையாக மீண்டு வந்து உள்ளது.
மும்பை,
ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான மும்பை தாராவியில் கொரோனா தொற்று முதன் முதலாக ஊடுருவியதும் பெரும் கலக்கம் ஏற்பட்டது. ஏனெனில், தாரவி பகுதி மிகவும் மக்கள் நெருக்கம் மிகுந்த இடமாகும்.
அங்கு எப்படி தான் நோய் பரவலை கட்டுபடுத்த போகிறார்களோ என்ற அச்சம் உருவானது. எனினும் மராட்டிய அரசு சிறப்பாக கையாண்டு தொற்று பரவலைக் கட்டுப்படுத்தியது. மராட்டிய அரசும் தாராவி பகுதியில் கொரோனாவை கட்டுப்படுத்திய விதத்தை உலக சுகாதார அமைப்பே பாராட்டியது. கொரோனா 2-வது 3-வது அலையிலும் தாராவி பகுதியில் பாதிப்பு காணப்பட்டது.
இந்தநிலையில் நேற்று தாராவி கொரோனாவில் இருந்து முழுமையாக மீண்டு உள்ளது. நேற்று தாராவியில் புதிதாக யாருக்கும் நோய் தொற்று கண்டறியப்படவில்லை. இதேபோல ஏற்கனவே தொற்று பாதித்தவர்களும் குணமடைந்துவிட்டனர். எனவே தாராவி கொரோனா இல்லாத பகுதியாக மாறி உள்ளது. இதுவரை அங்கு 8 ஆயிரத்து 652 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 419 பேர் உயிரிழந்து உள்ளனர். 8 ஆயிரத்து 233 பேர் குணமாகி உள்ளனர்.
Related Tags :
Next Story