ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்துக்கு டெல்லி ஐகோர்ட்டு நோட்டீஸ்
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்துக்கு டெல்லி ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
புதுடெல்லி,
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு தொடர்பாக பதிலளிக்க ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்திற்கு டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் அனைத்து ஆவணங்களையும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்க உத்தரவிட்ட விசாரணை கோர்ட்டு உத்தரவுக்கு எதிராக அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவை டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி யோகேஷ் கண்ணா விசாரித்தார்.
அமலாக்கத்துறையின் மனுவைப் பரிசீலித்த நீதிபதி அது தொடர்பாக பதிலளிக்க ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட எதிர் மனுதாரர்களுக்கு உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story