உள்துறை மந்திரி அமித்ஷா வரும் 1-ந் தேதி பெங்களூரு வருகை


உள்துறை மந்திரி அமித்ஷா வரும் 1-ந் தேதி பெங்களூரு வருகை
x
தினத்தந்தி 26 March 2022 5:21 AM IST (Updated: 26 March 2022 5:21 AM IST)
t-max-icont-min-icon

உள்துறை மந்திரி அமித்ஷா வரும் 1-ந் தேதி பெங்களூரு வருகிறார்.

பெங்களூரு,

உள்துறை மந்திரி அமித்ஷா வருகிற 1-ந் தேதி பெங்களூரு வருகிறார். இங்கு அரண்மனை மைதானத்தில் நடைபெறும் கூட்டுறவுத்துறை விழாவில் அவர் கலந்து கொள்கிறார். அதன் பிறகு அவர் துமகூரு சித்தகங்கா மடத்திற்கு சென்று அங்கு மடாதிபதியை நேரில் சந்தித்து ஆசி பெறுகிறார். அமித்ஷா வருகையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

அமித்ஷாவின் இந்த பயணத்தின்போது, மந்திரிசபை விரிவாக்கம் குறித்து அவருடன் ஆலோசிக்க முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை திட்டமிட்டுள்ளார். அவர் மந்திரிசபை மாற்றத்திற்கு அனுமதி வழங்கினால், அதைத்தொடர்ந்து பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து அனுமதி பெறுவார் என்று கூறப்படுகிறது. அதன் பிறகு மந்திரிசபை மாற்றம் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது. மொத்தத்தில் உகாதி பண்டிகைக்கு பிறகு மந்திரிசபை மாற்றம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story