கேரளா: முரண்டுபிடித்த ராஜநாகம்... தில்லாக பிடித்த வாவா சுரேஷ்!


கேரளா: முரண்டுபிடித்த ராஜநாகம்... தில்லாக பிடித்த  வாவா சுரேஷ்!
x
தினத்தந்தி 26 March 2022 10:38 AM IST (Updated: 26 March 2022 10:38 AM IST)
t-max-icont-min-icon

12 அடி உயர ராஜநாகத்தை தனக்கே உரிய பாணியில் லாவகமாக பிடித்தார்.

கோழிக்கோடு,,

கேரளாவின் பிரபல பாம்பு பிடி வீரர் வாவா சுரேஷ். இவர் கடந்த  ஜனவரி 30ஆம் தேதியன்று கோட்டயம் அருகே உள்ள குறிச்சி என்ற பகுதியில் ஒரு வீட்டில் நாக பாம்பை பிடித்து சாக்கில் அடைக்க முயன்ற போது, அந்த பாம்பு அவரது வலது தொடையில் கடுமையாக தீண்டியது.

இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், மரணத்தின் விளிம்பு வரை சென்று உயிர்பிழைத்தார். தற்போது மீண்டும் தனது வழக்கமான பாம்பு பிடிக்கும் பணியை செய்து வருகிறார்.

இந்த நிலையில், கேரள மாநிலம் பத்தனம் திட்டா அருகே குடியிருப்பு பகுதிக்குள் 12 அடி உயர ராஜ நாகநாகம் புகுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வாவா சுரேஷ், முரண்டு பிடித்த ராஜநாகத்தை தனக்கே உரிய பாணியில் லாவகமாக பிடித்தார். பின்னர் ராஜநாகத்தை சாக்குப்பையில் போட்டு, வனப்பகுதியில் பாதுகாப்பாக விடுவதற்காக எடுத்துச்சென்றார். 


Next Story