கர்நாடகா: மூன்று லாரிகள் அடுத்தடுத்து மோதியதில் தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் பலி


கர்நாடகா: மூன்று லாரிகள் அடுத்தடுத்து மோதியதில் தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் பலி
x
தினத்தந்தி 26 March 2022 1:02 PM IST (Updated: 26 March 2022 1:02 PM IST)
t-max-icont-min-icon

வடமாநிலத்திற்க்கு சென்ற மூன்று லாரிகள் அடுத்தடுத்து மோதியதில், தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் பலியானார்.

கர்நாடகா,

கர்நாடக மாநிலம், சித்ரதுர்கா மாவட்டம் பரமசாகரா போலீஸ் எல்லைக்குட்பட்ட கொலால் கிராமம் அருகில் பெங்களூர்-மும்பை தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இதில் இரவு 12 மணியளவில் வட மாநிலத்திற்க்கு சென்ற மூன்று லாரிகள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. 

இதில் தமிழ்நாட்டை சேர்ந்த 25 வயதுடைய வாலிபர் உயிரிழந்த நிலையில் மேலும்  4 பேருக்கு பலத்த அடிபட்டு அவர்கள் அனைவரும் சித்ரதுர்கா அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் தெரிந்ததும் பரமசாகரா போலீசார் வந்து மூன்று லாரிகளை அப்புறப்படுத்தி போக்குவரத்துக்கு வழி வகுத்துக் கொடுத்தனர்.  மேலும் விபத்துகான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story