டெல்லி பட்ஜெட் 2022: கல்வித் துறைக்காக ஆம் ஆத்மி அரசு ரூ.16,278 கோடி ஒதுக்கீடு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 26 March 2022 3:46 PM IST (Updated: 26 March 2022 3:46 PM IST)
t-max-icont-min-icon

2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் ஆம் ஆத்மி அரசு கல்வித் துறைக்காக ரூ.16,278 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் 2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை துணை முதல்வர் மணீஷ் சிசோடியா அறிவித்தார். இதில் வரும் நிதியாண்டிற்காக மொத்தம் ரூ. 75 ஆயிரத்து 800 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இது முந்தைய பட்ஜெட்டை விட 9.86 சதவீதம் அதிகமாகும். 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட் ரூ.69 ஆயிரம் கோடி ஆகும். ஆம் ஆத்மி அரசின் எட்டாவது பட்ஜெட் தொடர் இதுவாகும்.

இந்த பட்ஜெட்டில் ஆம் ஆத்மி அரசு கல்வித் துறைக்காக ரூ.16 ஆயிரத்து 278 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. அதில் ஒரு பகுதியானது வீடற்ற குழந்தைகளுக்கு உறைவிடப் பள்ளிகள் ஏற்படுத்திக்கொடுப்பது மற்றும் நகரப் பள்ளியில் அறிவியல் அருங்காட்சியகம் கட்டுவதற்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.


Next Story