பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் கைது...!
காரைக்கால் அருகே பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
காரைக்கால்,
புதுச்சேரி மாநிலம் காரைக்கல் அருகே திருநள்ளாறு பகுதியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமிக்கும், திருநள்ளாறு பேட்டை பகுதியை சேர்ந்த முருகவேல் மகன் மணிகண்டன் (வயது 21) என்பருக்கும் இடையே இன்ஸ்டாகிராம் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது.
இவரும் பல முறை தனிமையில் சந்தித்த போது மணிகண்டன் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்று உள்ளார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மாணவி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இருப்பதை அறிந்தனர்.
இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் மாணவியிடம் விசாரித்து உள்ளனர். அப்போது நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் அவர் தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக மாணவின் பெற்றோர் கொடுத்த தகவலின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், காதலன் மணிகண்டனை போக்சோவில் கைது சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story