வேலைநிறுத்தத்திற்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு:வங்கி சேவைகள் பாதிக்க வாய்ப்பு
இரண்டு நாட்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் வங்கி ஊழியர்கள் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
மத்திய அரசின் கொள்கைகள் தொழிலாளர்கள் நலனை பாதிக்கும் வகையில் இருப்பதாக கூறி, தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நாடு மார்ச் 28 மற்றும் 29 ஆகிய இரண்டு நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் வங்கி ஊழியர்களும் பங்கேற்க உள்ளதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது. வங்கிகளை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் திட்டம் மற்றும் வங்கி விதிகள் மசோதா 2021-ஐ கண்டித்து இதில் வங்கி ஊழியர்கள் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மார்ச் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் வங்கி சேவைகள் பாதிக்கப்படலாம் என எஸ்.பி.ஐ. வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.
Related Tags :
Next Story