இந்திய சிறைகளில் இருந்த 3 பாகிஸ்தான் கைதிகள் - சொந்த நாட்டுக்கு அனுப்பப்பட்டனர்
இந்திய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் கைதிகள் 3 பேர் சொந்த நாட்டுக்கு அனுப்பப்பட்டனர்.
புதுடெல்லி,
பாகிஸ்தானை சேர்ந்த சமீரா அப்துல் ரகுமான், முர்தசா அஹ்கர் அலி, அகமது ராஜா ஆகிய 3 பேர் குற்ற வழக்குகளில் சிக்கி இந்திய சிறைகளில் தண்டனை அனுபவித்து வந்தனர். இந்த 3 பேரின் தண்டனை காலம் நிறைவடைந்ததை தொடர்ந்து, அவர்களை பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது.
அதன்படி நேற்று அவர்கள் 3 பேரும் அட்டாரி-வாகா எல்லை வழியாக பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் சமீரா அப்துல் ரகுமான், தனது 4 வயது பெண் குழந்தை சனா பாத்திமாவுடன் தாய்நாடு திரும்பினார். இந்த தகவலை மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்து உள்ளது.
Related Tags :
Next Story