கோவா முதல்-மந்திரியாக பிரமோத் சாவந்த் நாளை பதவியேற்கிறார்


கோவா முதல்-மந்திரியாக பிரமோத் சாவந்த் நாளை பதவியேற்கிறார்
x
தினத்தந்தி 27 March 2022 10:07 AM GMT (Updated: 2022-03-27T15:37:51+05:30)

கோவா மாநில முதல்-மந்திரியாக பிரமோத் சாவந்த் 2-வது முறையாக நாளை பதவியேற்கிறார்.

பனாஜி,

கோவா மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 20 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. 3 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களும், மகாராஷ்டிரவாடி கோமந்தக் கட்சியின் 2 எம்.எல்.ஏ.க்களும் பா.ஜனதாவுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால் கோவா மாநிலத்தில் பா.ஜனதா வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது.

இந்த நிலையில், கோவா மாநில முதல்-மந்திரியாக பிரமோத் சாவந்த் 2-வது முறையாக நாளை பதவி ஏற்கிறார். இதற்கான பதவி ஏற்பு விழா நாளை காலை 11 மணிக்கு டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி ஸ்டேடியத்தில் நடக்கிறது.

இந்த விழாவில் பிரதமர் மோடி மற்றும் மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் ஆகியோர் பங்கேற்கின்றனர். இந்த விழாவில் சுமார் 10 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story