டெல்லி: பள்ளி மாணவர்கள் இடையே மோதல்; தடுக்க சென்ற நபர் சுட்டு கொலை


டெல்லி:  பள்ளி மாணவர்கள் இடையே மோதல்; தடுக்க சென்ற நபர் சுட்டு கொலை
x
தினத்தந்தி 27 March 2022 4:19 PM IST (Updated: 27 March 2022 4:19 PM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் பள்ளி மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 19 வயது வாலிபர் சுட்டு கொல்லப்பட்டார்.



புதுடெல்லி,



டெல்லியின் தென்மேற்கே துவாரகா நகரில் அக்சய் என்ற பெயரில் பள்ளி கூடமொன்று உள்ளது.  பள்ளியின் முன்பு மாணவர்கள் சிலர் கைகலப்பில் ஈடுபட்டனர்.  இதில் ஒரு மாணவர், அந்த வழியே சென்ற குர்ஷித் (வயது 19) என்பவரை அழைத்துள்ளார்.

அவரும் சென்றுள்ளார்.  இந்த நிலையில், மற்றொரு மாணவரின் கும்பலை சேர்ந்த நபர்களில் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.  இதில் குர்ஷித் மீது குண்டு பாய்ந்தது.  பலத்த காயமடைந்த அவரை தராக் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

எனினும் குர்ஷித் உயிரிழந்து விட்டார் என மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.  துப்பாக்கியால் சுட்டவர் சாஹில் என்ற மோனு என்ற லாத்தர் என அடையாளம் காணப்பட்டு உள்ளது.  ஆயுத சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த வழக்கில் சாட்சி கூறுவதற்கு போலீசார் ஆட்களை தேடி வருகின்றனர்.  தொடர்ந்து விசாரணையும் நடந்து வருகிறது.


Next Story