பீகார் முதல்-மந்திரியை தாக்க முயற்சி; வைரலான வீடியோ


பீகார் முதல்-மந்திரியை தாக்க முயற்சி; வைரலான வீடியோ
x
தினத்தந்தி 27 March 2022 10:46 PM IST (Updated: 27 March 2022 10:46 PM IST)
t-max-icont-min-icon

பீகார் முதல்-மந்திரி நிதீஷ் குமாரை இளைஞர் ஒருவர் தாக்க முற்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.





பாட்னா,



பீகாரில் முதல்-மந்திரி நிதீஷ் குமார் பக்தியார்பூர் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக இன்று சென்றுள்ளார்.  அவருடன் பாதுகாவலர்களும் இருந்தனர்.  ஷீல்பத்ரா யாஜி என்ற சுதந்திர போராட்ட வீரரருக்கு மலரஞ்சலி செலுத்துவதற்காக அவர் மேடையேறி உள்ளார். 

அதன்பின் அவர் மலரஞ்சலி செலுத்தி கொண்டிருந்தபோது, உள்ளூர்இளைஞர் ஒருவர் பாதுகாப்பு வளையத்தில் சிக்காமல் விறுவிறு என நடந்து சென்று மேடையில் ஏறியுள்ளார்.

அவர் முதல்-மந்திரியின் தோளில் குத்து விட்டுள்ளார்.  இதனை கண்டவுடன் அருகேயிருந்த பாதுகாவலர்கள் உடனடியாக இளைஞரை சூழ்ந்து கொண்டு தள்ளி சென்றனர்.  அந்நபர் கைது செய்யப்பட்டு உள்ளார்.  அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதில், அந்த நபர் சங்கர் வர்மா என அடையாளம் காணப்பட்டு உள்ளார்.  நகை கடை ஒன்றில் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார்.

அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் காணப்படுகிறார் என்று பாட்னா காவல் உயரதிகாரி தில்லான் கூறியுள்ளார்.

பீகார் முதல்-மந்திரி நிதீஷ், தன்னை தாக்கிய இளைஞர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று அதிகாரிகளை கேட்டு கொண்டுள்ளார்.  அந்த நபர் கூறும் புகார்களை கவனிக்கும்படியும் அதிகாரிகளிடம் அவர் கூறியுள்ளார்.


Next Story