டெல்லி விமான நிலையத்தில் மின் கம்பத்தில் ஸ்பைஸ்ஜெட் விமானம் உரசியதால் பரபரப்பு
டெல்லி விமான நிலையத்தில், ஜம்மு செல்லவிருந்த விமானம் மின் கம்பத்தில் உரசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுடெல்லி,
தலைநகர் டெல்லியில் இருந்து ஜம்முவுக்கு ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்திற்கு சொந்தமான எஸ்.ஜி 160 என்ற விமானம் புறப்பட தயாராக இருந்தது. பயணிகள் முனையத்தில் இருந்து ரன்வேவிற்கு விமானம் நகர்த்திசெல்லப்பட்ட போது (புஷ்பேக்) அப்பகுதியில் இருந்த மின் கம்பத்தில் விமானம் உரசையது.
இதனால், விமானத்தின் வால்பகுதி சேதம் அடைந்தது. இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, மாற்று விமானம் கொண்டு வரப்பட்டு பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story