இந்தியாவில் மக்கள் தொகையில் முஸ்லிம்கள் இந்துக்களை "ஒருபோதும்" முந்த முடியாது-முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர்
மக்கள் தொகையில் இந்துக்களை முஸ்லிம்கள் முந்தலாம் என்பது வெறும் "பிரசாரம்" மட்டுமே என்று முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ் ஒய் குரேஷி தெரிவித்து உள்ளார்.
புதுடெல்லி
குடும்பக் கட்டுப்பாடு கொள்கைக்கு இஸ்லாம் விரோதம் இல்லை என்றும், மக்கள் தொகையில் இந்துக்களை முஸ்லிம்கள் முந்தலாம் என்பது வெறும் "பிரசாரம்" மட்டுமே என்று முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ் ஒய் குரேஷி தெரிவித்து உள்ளார்.
தனது "மக்கள்தொகை கட்டுக்கதை: இஸ்லாம், குடும்பக் கட்டுப்பாடு மற்றும் இந்தியாவில் அரசியல்" என்ற புத்தக விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ் ஒய் குரேஷி கூறியதாவது:-
இந்தியாவில் உள்ள முஸ்லீம் மக்கள்தொகை பற்றிய " கட்டு கதைகளை" பட்டியலில் ஒன்று, அவர்கள் அதிக குழந்தைகளை உருவாக்குகிறார்கள் மற்றும் மக்கள்தொகை வெடிப்புக்கு அவர்கள் மட்டுமே காரணம் என்று கூறப்படுகிறது.
முஸ்லிம் மக்கள்தொகை வளர்ச்சி மக்கள்தொகை சமநிலையை சீர்குலைக்கிறது என்பது மேலும் ஒரு கட்டுக்கதை ஆகும்.
இந்தியாவின் மக்கள்தொகை விகிதம் உண்மையில் 1951 இல் 9.8 சதவீதமாக இருந்த முஸ்லிம்களின் அதிகரிப்பு 2011 இல் 14.2 சதவீதமாகவும், இந்துக்களின் எண்ணிக்கை 84.2 சதவீதத்தில் இருந்து 79.8 சதவீதமாக வீழ்ச்சியடைந்ததையும் காட்டுகிறது. ஆனால் இது 60 ஆண்டுகளில் 4.4 சதவீத புள்ளிகள் அதிகரித்துள்ளது என்பதை சுட்டிக்காட்டினார்.
இந்துக்களை விட முஸ்லிம்கள் குடும்பக் கட்டுப்பாட்டை வேகமாக பின்பற்றுகிறார்கள் அவர்களின் குழந்தைகளின் எண்ணிக்கையில் இடைவெளி குறைந்து வருகிறது.
இஸ்லாம் குடும்பக் கட்டுப்பாட்டுக்கு எதிரானது அல்ல. குடும்பக் கட்டுப்பாட்டை குர்ஆன் எங்கும் தடை செய்யவில்லை. ஆதரவாகவும் எதிராகவும் விளக்கங்கள் மட்டுமே உள்ளன.
பல குர்ஆன் வசனங்கள் மற்றும் ஹதீசின் மேற்கோள்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் குழந்தைகளின் நல்ல வளர்ப்புக்கான உரிமை ஆகியவற்றை வலியுறுத்துகின்றன.
அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற இந்து மக்களை முந்திச் செல்ல முஸ்லிம்கள் திட்டமிட்ட சதி நடப்பதாக மற்றொரு பிரசாரம் நடைபெறுகிறது. முஸ்லிம் தலைவரோ அல்லது அறிஞரோ முஸ்லிம்களிடம் கூறவில்லை என கூறினார்.
பேராசிரியர்கள் தினேஷ் சிங், மற்றும் முன்னாள் டெல்லி பல்கலைக்கழக துணைவேந்தர் அஜய் குமார் ஆகியோரின் கணித மாதிரியை மேற்கோள் காட்டி, மக்கள் தொகையில் முஸ்லிம்கள் இந்துக்களை "ஒருபோதும்" முந்த முடியாது என கூறினார்.
மேலும் அவர் கூறும் போது மேலும் ஒரு கட்டுக்கதை அவர்கள் பலதார மணம்புரிவது என கூறப்படுகிறது. 1975 ல் ஒரு அரசாங்க ஆய்வில் அனைத்து சமூகங்களிலும் பலதார மணம் உள்ளது. ஆனால் முஸ்லிம்கள் மிகக் குறைந்த பலதார மணம் கொண்டவர்கள். மக்கள் தொகையை அதிகரிக்க பலதார மணத்தை முஸ்லிம்கள் பயன்படுத்துகிறார்கள் என்று கூறுவது தவறானது.
இஸ்லாம் பலதார மணத்தை ஊக்குவிக்கிறது என்ற பொதுவான தவறான கருத்து உள்ளது ஆனால் உண்மை வேறுவிதமாக உள்ளது .பாலின விகிதம் (1,000 ஆண்களுக்கு 924 பெண்கள் மட்டுமே) அனுமதிக்காததால், பலதார மணம் இந்தியாவில் சாத்தியமில்லை என கூறினார்.
ஜம்மு காஷ்மீர் முன்னாள் கவர்னர் என் என் வோஹ்ரா, முன்னாள் சுகாதார செயலாளர் கே சுஜாதா ராவ் மற்றும் தி பாப்புலேஷன் பவுண்டேஷன் ஆப் இந்தியா நிர்வாக இயக்குனர் பூனம் முத்ரேஜா ஆகியோர் புத்தக விவாதத்தில் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story