மறுமணம் செய்கிறார் ஐஏஎஸ் அதிகாரி டீனா டாபி!
2016 ஐஏஎஸ் தேர்வில் அகில இந்தியளவில் முதலிடம் பிடித்த டீனா டாபி, விரைவில் மறுமணம் செய்ய உள்ளார்.
ஜெய்ப்பூர்
2016 ஐஏஎஸ் தேர்வில் டீனா டாபி. அகில இந்தியளவில் முதலிடம் பிடித்தார். ஐஏஎஸ் அதிகாரி டீனா டாபி தற்போது ராஜஸ்தானின் இணை நிதி இயக்குநராகப் பணியாற்றுபவர். தன்னுடைய சொந்த வாழ்வில் இரண்டாவது அத்தியாயத்தைத் தொடங்கவிருக்கிறார்.
முதல் திருமணத்தில் இருந்து விவாகரத்துபெற்ற நிலையில் ராஜஸ்தானின் தொல்பொருள் மற்றும் அருங்காட்சியகம் துறையின் இயக்குனராக பணிபுரியும் சக ஐஏஎஸ் அதிகாரி டாக்டர் பிரதீப் கவண்டேவைத் திருமணம் செய்யவுள்ளதாக தங்களின் சமூக வலைதளத்தில் பகிர்ந்தனர்.
டீனா தன்னுடைய பக்கத்தில் பிரதீப்புடன் இருக்கும் படத்தைப் பகிர்ந்து, "நீ தந்த சிரிப்பை நான் அணிந்திருக்கிறேன்" என கேப்ஷன் பதிவிட்டுள்ளார்.பிரதீப், "நாம் ஒன்றாக இருப்பது எனக்கு விருப்பமான இடம்" எனப் பதிவிட்டுள்ளார்.
இவர்களின் திருமணம் ஏப்ரல் 22 ஜெய்ப்பூரில் நடக்கவிருப்பதாக தெரிகிறது
Related Tags :
Next Story