10 ஆயிரம் அடி உயரத்தில்... இந்தியாவுக்கு பெருமை சேர்த்த உலகின் மிக நீண்ட சுரங்க பாதை


10 ஆயிரம் அடி உயரத்தில்... இந்தியாவுக்கு பெருமை சேர்த்த உலகின் மிக நீண்ட சுரங்க பாதை
x
தினத்தந்தி 29 March 2022 8:30 PM IST (Updated: 29 March 2022 8:30 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவின் அடல் சுரங்க பாதை 10 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்த உலகின் மிக நீண்ட சுரங்க பாதை என்ற பெருமையை பெற்றுள்ளது.



மணாலி,


அடல் சுரங்க பாதை ரோஹ்தங் பகுதியில் 10 ஆயிரம் அடி உயரத்தில் 9.02 கி.மீ. நீளத்தில் அமைந்துள்ளது.  இந்த உயரத்தில் அமைந்த உலகின் மிக நீள சுரங்க பாதை என்ற அளவில் லண்டனில் உள்ள உலக சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்து உள்ளது.

இந்த சுரங்கத்தின் தெற்கு முனை மணாலி அருகே 9,840 அடி உயரத்தில் தொடங்குகிறது.  வடக்கு முனை லஹால் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள சிச்சு என்ற இடத்தில் 10,171 உயரத்தில் அமைந்துள்ளது.

இதனால், மணாலி மற்றும் கெய்லாங் இடையேயான 46 கி.மீ. பயண தொலைவு குறைவதுடன், 2 மணிநேரத்திற்கும் கூடுதலாக பயண நேரமும் குறையும்.

ரூ.3,200 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த சுரங்க பாதையானது உலகளவில் முதன்முறையாக 4ஜி இன்டெர்நெட் இணைப்பு வசதியும் அளிக்கிறது.  ஒவ்வொரு 60 மீட்டர் தொலைவுக்கும் சி.சி.டி.வி. கேமிராக்களை நீங்கள் காணலாம்.  கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

ஒவ்வொரு 150 மீட்டர் தொலைவிலும் அவசரகாலத்தில் வெளியேறும் கதவுகளும் அமைக்கப்பட்டு உள்ளன.


Next Story