மைனர் மகளுக்கு பாலியல் வன்கொடுமை; 55 வயது நபரை கொன்று ஆற்றில் வீசிய தந்தை


மைனர் மகளுக்கு பாலியல் வன்கொடுமை; 55 வயது நபரை கொன்று ஆற்றில் வீசிய தந்தை
x
தினத்தந்தி 29 March 2022 8:57 PM IST (Updated: 29 March 2022 8:57 PM IST)
t-max-icont-min-icon

மத்திய பிரதேசத்தில் மகளை பாலியல் வன்கொடுமை செய்த நபரை கொன்று, ஆற்றில் துண்டுகளாக வீசி சென்ற தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.



கந்த்வா,



மத்திய பிரதேசத்தின் கந்த்வா மாவட்டத்தில் வசித்து வந்த 14 வயது சிறுமியை திரிலோக்சந்த் (வயது 55) என்பவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதன்பின்னர் அவரை காணவில்லை.  இந்நிலையில், அவரது உடல் பல துண்டுகளாக அஜ்னல் ஆற்றில் மிதந்துள்ளது.  கந்த்வா மாவட்ட தலைமையகத்தில் இருந்து 40 கி.மீ. தொலைவில் கிடைத்த இதுபற்றிய புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் பரவி உள்ளன.

இதில் கொலை செய்யப்பட்ட நபர் திரிலோக்சந்த் என தெரிய வந்துள்ளது.  இதனை தொடர்ந்து, போலீஸ் சூப்பிரெண்டு விவேக் சிங் தலைமையில் விசாரணை நடந்தது.

அதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.  தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்தது திரிலோக் என அறிந்த சிறுமியின் தந்தை, சிறுமியின் மாமாவுடன் சேர்ந்து திரிலோக்கை அழைத்து கொண்டு மோட்டார் சைக்கிளில் அஜ்னல் ஆற்றுக்கு சென்றுள்ளனர்.

இதன்பின்பு, திரிலோக்கை கொன்று அவரது தலையை தனியாக வெட்டியும், உடலையும் இரண்டு பாகங்களாக வெட்டியும் எடுத்து, அவை ஆற்றில் வீசப்பட்டு உள்ளன.

இந்த சம்பவத்தில், சிறுமியின் தந்தையை கைது செய்த போலீசார் வேறு யாருக்கு எல்லாம் தொடர்பு உள்ளது என விசாரித்து வருகின்றனர்.  இந்த சம்பவத்தில், கொல்லப்பட்ட நபரும், குற்றவாளிகளும் உறவினர்கள் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.




Next Story