மனைவியிடம் தகாத முறையில் நடந்து கொண்டவருக்கு தர்ம அடி கொடுத்த கணவர்..!
தனது மனைவியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட நபரை, கணவர் தர்ம அடி கொடுத்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது.
குண்டூர்
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் சங்கத் தலைவராக பணியாற்றிய ரங்கநாத், சங்கத்தில் இருக்கும் பெண் உறுப்பினர்களிடம் அடிக்கடி கைமாறாக பணம் வாங்கி திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதாக கூறப்படுகிறது.
மேலும், சில பெண் உறுப்பினர்களிடம் தகாத முறையில் நடந்து கொண்ட நிலையில், ரங்கநாத்தால் பாதிக்கப்பட்ட பெண் உறுப்பினர் ஒருவர், அது குறித்து கணவரிடம் கூறியிருக்கிறார். ஆத்திரமடைந்த கணவர் மனைவி கண் முன்னே, ரங்கநாத்தை துவைத்து எடுத்து துவம்சம் செய்தார். வலி தாங்காமல் ரங்கநாத் அலறி துடித்த போதும், பெண்ணின் கணவர் அடியை விடவில்லை.
இந்த வீடியோ வைரலானதை அடுத்து, ரங்கநாத் மீது இரண்டு போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதியப்பட்டுள்ளது. மேலும், பிற்படுத்தப்பட்டோர் நல சங்க பதவியில் இருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளார்.
Related Tags :
Next Story