குடும்பத்துக்கு 3 இலவச கியாஸ் சிலிண்டர்கள்: கோவா அரசு முடிவு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 30 March 2022 4:31 AM IST (Updated: 30 March 2022 4:31 AM IST)
t-max-icont-min-icon

குடும்பத்துக்கு 3 இலவச கியாஸ் சிலிண்டர்கள் வழங்க கோவா மந்திரிசபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

பனாஜி, 

கோவா மாநிலத்தில் ஆட்சியை தக்கவைத்துக்கொண்டுள்ள பா.ஜ.க. தனது தேர்தல் அறிக்கையில், ஆண்டுதோறும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 3 சமையல் கியாஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தது. 

இந்நிலையில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றபின் முதல் மந்திரிசபை கூட்டம் நேற்று முன்தினம் முதல்-மந்திரி பிரமோத் சாவந்த் தலைமையில் நடைபெற்றது. அதன் பின் பிரமோத் சாவந்த் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘எங்கள் தேர்தல் அறிக்கையில் உறுதி அளித்தபடி, புதிய நிதியாண்டில் இருந்து ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 3 சமையல் கியாஸ் சிலிண்டர்கள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவது என மந்திரிசபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது’ என்று கூறியுள்ளார்.


Next Story