தேசிய நெடுஞ்சாலைகளில் 28 இடங்களில் போர் விமானங்களை தரையிறக்க முடியும்: மத்திய அரசு
நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 28 இடங்கள் போர் விமானங்களை தரையிறக்க கூடிய இடங்களாக கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் போர் விமானங்களை 28 இடங்களில் அவசர காலத்திற்கு தரையிறக்க முடியும் என்று மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசாமில் 5 இடங்களிலும், மேற்கு வங்காளத்தில் 4 இடங்களும், ஆந்திரா, குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் 3 இடங்களிலும் பீகார், அரியானா, ஜம்மு காஷ்மீர், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் 2 இடங்களிலும் பஞ்சாப், உத்தரபிரதேசத்தில் ஒரு இடத்திலும் போர் விமானங்களை அவசர காலத்தில் தேசிய நெடுஞ்சாலையில் தரையிறக்க முடியும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாலைபோக்குவரத்து அமைச்சகத்தின் அறிக்கையை எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய மந்திரி நிதின் கட்காரி தாக்கல் செய்தார்.
Related Tags :
Next Story