மராட்டியத்தில் வெயில் தாக்கத்தால் வாலிபர் சுருண்டு விழுந்து சாவு
மராட்டியத்தில் வெயில் தாக்கத்தால் வாலிபர் ஒருவர் சுருண்டு விழுந்து பலியானார்.
மும்பை,
மராட்டியத்தில் கோடை காலம் தொடங்கி இருப்பதால் காலை முதலே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. வட மராட்டிய பகுதியான விதர்பா, மாரத்வாடா பகுதிகளில் வெப்ப அலை அதிகளவில் இருப்பதாகவும், இதனால் பொதுமக்கள் வெளியில் நடமாட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் ஜல்காவை சேர்ந்த ஜித்தேந்திரா (வயது27) என்பவர் நேற்று முன்தினம் பிற்பகலில் பண்ணையில் வேலை செய்துவிட்டு வீடு திரும்பினார். வழியில் திடீரென அவர் சுருண்டு விழுந்ததார். இதனை கண்ட மற்ற விவசாயிகள் அவரை மீட்டு அமல்னேர் கிராமப்புற ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் நடத்திய பரிசோதனையில் வரும் வழியிலேயே அவர் உயிரிழந்தது தெரியவந்தது. வெப்ப தாக்கத்தால் அவர் பலியானதாக டாக்டர் ஆஷிஷ் பாட்டீல் தெரிவித்தார்.
ஜல்காவ் மாவட்டத்தில் நேற்று முன்தினம் அதிகபட்சமாக 41.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இருந்தது. இது இயல்பை விட 2.5 டிகிரி செல்சியஸ் அதிகமாகும்.
வருகிற நாட்களில் மராட்டியம் உள்பட நாட்டின் சில பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
Related Tags :
Next Story