சரிவுடன் முடிவடைந்த இந்திய பங்குச்சந்தை


சரிவுடன் முடிவடைந்த இந்திய பங்குச்சந்தை
x
தினத்தந்தி 31 March 2022 4:40 PM IST (Updated: 31 March 2022 4:40 PM IST)
t-max-icont-min-icon

இந்திய பங்குச்சந்தை இன்று சரிவுடனே நிறைவடைந்திருக்கிறது

மும்பை,

உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதலை கண்டித்து ரஷியா மீது பல்வேறு நாடுகள் கடும் பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. இதனால் இந்தியாவில் கடந்த சில வாரங்களாக பங்குசந்தை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது 

இன்று பங்குச்சந்தை சரிவுடனே நிறைவடைந்திருக்கிறது .மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 115.48 புள்ளிகள் சரிந்து 58,568.51 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்துள்ளது. 

தேசிய பங்குச்சந்தை நிப்டி 33.50 புள்ளிகள் சரிந்து 17,464.75 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்துள்ளது.

Next Story