ஆந்திராவில் 8 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு 2 வாரம் சிறை தண்டனை: ஆந்திர ஐகோர்ட்டு அதிரடி
ஆந்திராவில் 8 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு 2 வாரம் சிறை தண்டனை விதித்து ஆந்திர ஐகோர்ட்டு அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது.
அமராவதி,
ஆந்திராவில் தற்போதைய ஆட்சியில் அனைத்து கிராமங்களிலும் கிராம செயலகம் அமைத்து, இந்த கிராமங்களில் உள்ள மக்களுக்கு பொதுசேவைகள் நடைபெற்று வருகிறது.
இந்த கிராம செயலகங்கள், அங்குள்ள அரசு பள்ளி வளாகத்திலேயே கட்டப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து பல்வேறு தரப்பினர் ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்டு அரசுப்பள்ளி வளாகத்தில் இந்த செயலகம் செயல்படக்கூடாது என்றும், மாவட்ட உயர் அதிகாரிகள் தலையிட்டு உடனடியாக நிறுத்தவேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்த உத்தரவை மதிக்காமல் செயல்பட்டதாக 8 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு 2 வாரம் சிறை தண்டனை விதித்து ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பளித்தது. இதையடுத்து அதிகாரிகள் தவறுக்காக மன்னிப்பு கேட்டனர். அதிகாரிகளின் மன்னிப்பு கேட்டதை ஏற்றுக்கொண்ட ஐகோட்டு, சிறை தண்டனையில் இருந்து விலக்கு அளித்தது ஒரு வருடத்திற்கு பிற்படுத்தப்பட்டோர் நல விடுதியில் மாதம் ஒருமுறை பணியாற்றி சொந்த செலவில் உணவளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
Related Tags :
Next Story