நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தியூபா இந்தியா வருகை
நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தியூபா இன்று இந்தியா வந்துள்ளார்.
புதுடெல்லி ,
நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தியூபா இன்று இந்தியா வந்துள்ளார் . இந்தியாவில் அவர் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதன்படி அவர் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை இன்று சந்திக்க இருக்கிறார்.
இதன்பின்னர் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோரை நாளை சந்தித்து பேசுகிறார். இதுதவிர பிற நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொள்கிறார்.
இந்த பயணத்தில், இரு நாட்டு உறவுகள், வளர்ச்சி, வர்த்தகம், பொருளாதார ஒத்துழைப்பு பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது.
Related Tags :
Next Story