மத்திய மந்திரி பியூஸ் கோயலுடன் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 1 April 2022 5:23 PM IST (Updated: 1 April 2022 6:48 PM IST)
t-max-icont-min-icon

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியூஸ் கோயலுடன் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து வருகிறார்.

புதுடெல்லி,

டெல்லி சென்றுள்ள முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலி, அங்கு முக்கிய பிரமுகர்களை சந்தித்து வருகிறார். இந்த நிலையில்,மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயலுடன் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து வருகிறார். 

காலையில் மத்திய நிதி மந்திரியை சந்தித்த நிலையில், தற்போது தொழில்துறை மந்திரியுடன் முதல் அமைச்சர் சந்தித்து வருகிறார். இந்த சந்திப்பின்போது, தொழில்துறை சார்ந்த முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை பியூஸ் கோயலிடம் வழங்கினார்.

இதில் முக்கியமாக, பின்னலாடை நிறுவனங்களின் கோரிக்கையான  நூல் விலை குறைப்பு,  சேலம் எஃகு தொழிற்சாலையில் மிகையாக உள்ள நிலங்களை பாதுகாப்பு தொழில் வழித்தடங்கள் அமைக்க ஒதுக்கவேண்டும், தருமபுரி, மன்னார்குடி, வாழப்பாடி, சேலம் ஆகிய பகுதிகளில் ஜவுளிப்பூங்கா அமைக்க மத்திய அரசு ஒத்துழைப்பு அளிப்பதுடன், தேவையான நிதி அளிக்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதல் அமைச்சர், பியூஸ் கோயலிடம் வழங்கினார்.


Next Story