வெளிநாட்டு சிறைகளில் 8,278 இந்தியர்கள்; மக்களவையில் மத்திய மந்திரி தகவல்
வெளிநாட்டு சிறைகளில் விசாரணைக் கைதிகள் உள்பட 8 ஆயிரத்து 278 இந்திய கைதிகள் உள்ளனர்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவையில் நேற்று அளிக்கப்பட்ட ஒரு எழுத்துப்பூர்வ கேள்விக்கு மத்திய வெளியுறவு ராஜாங்க மந்திரி வி.முரளீதரன் பதிலளித்தார். அப்போது அவர், வெளிநாட்டு சிறைகளில் விசாரணைக் கைதிகள் உள்பட 8 ஆயிரத்து 278 இந்திய கைதிகள் உள்ளனர். அவர்களில் 156 பேர் ஆயுள் தண்டனை பெற்றவர்கள்.
பல நாடுகளில் அமலில் உள்ள வலுவான தனியுரிமை சட்டங்களின் காரணமாக, சிறைக்கைதிகள் விருப்பப்பட்டால் அன்றி, அவர்களைப் பற்றிய தகவல்களை அந்நாட்டு அதிகாரிகள் அளிப்பதில்லை எனக் கூறினார்.
Related Tags :
Next Story