சலுகை விலையில் எண்ணெய் கிடைக்கும் போது ஏன் வாங்கக்கூடாது? நிர்மலா சீதாராமன்

சலுகை விலையில் எண்ணெய் கிடைக்கும் போது ஏன் வாங்கக்கூடாது? நிர்மலா சீதாராமன்
x
தினத்தந்தி 2 April 2022 4:47 PM IST (Updated: 2 April 2022 4:47 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவின் ஒட்டுமொத்த நலனை கருத்தில் கொண்டே, ரஷியாவிடமிருந்து சலுகை விலையில் எண்ணெய் வாங்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

இந்தியாவின் ஒட்டுமொத்த நலனை கருத்தில் கொண்டே, ரஷியாவிடமிருந்து சலுகை விலையில் எண்ணெய் வாங்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது;-

 நமது எரிபொருள் பாதுகாப்பே நமக்கு அனைத்தையும் விட முக்கியம். சலுகை விலையில் எரிபொருள் கிடைக்கும் போது, ஏன் அதனை நாம் வாங்கக் கூடாது?  நாம் ரஷியாவிடமிருந்து எரிபொருள் வாங்க ஆரம்பித்துவிட்டோம். ஒரு சில பேரல்கள் இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இன்னும் 3 - 4 நாள்களில் விநியோகம் தொடங்கும், பிறகு இது தொடரும். இந்த முடிவு, இந்தியாவின் ஒட்டுமொத்த நலனையும் கருத்தில் கொண்டுதான் எடுக்கப்பட்டுள்ளது” என்றார். 

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில், அந்நாடு மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதனையும் மீறி ரஷியாவிடம் இருந்து சலுகை விலையில் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ய  இந்தியா முடிவு செய்துள்ளது. இதற்கு அமெரிக்கா விமர்சனங்கள் முன்வைத்திருந்த நிலையில், இந்தியா மேற்கண்ட பதிலை அளித்துள்ளது. 

Next Story