இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,096- ஆக குறைந்தது - 81 பேர் உயிரிழப்பு
இந்தியாவில் நேற்று முன் தினம் 1,335 பேரும், நேற்று 1,260- பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று பாதிப்பு 1,096- ஆக குறைந்துள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது. தமிழகம் உள்பட பல மாநிலங்களில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு இரட்டை இலக்க எண்களில் பதிவாகி வருவது மக்களுக்கு ஆறுதலை கொடுத்துள்ளது. அந்த வகையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,096- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,096- பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக மேலும் 81 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்பில் இருந்து 1,447- பேர் குணம் அடைந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5,21,345- ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 13,031- ஆக உள்ளது. இந்தியாவில் இதுவரை போடப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 184.66- கோடியாகும். நேற்று ஒருநாளில் மட்டும் 12,75,495- பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று முன் தினம் 1,335 பேரும், நேற்று 1,260- பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று பாதிப்பு 1,096- ஆக குறைந்துள்ளது.
Related Tags :
Next Story