ஆர்.ஆர்.ஆர் படத்தை போன்று இந்திய பொருளாதாரம் சாதனை படைத்து வருகிறது - பியூஷ் கோயல்


ஆர்.ஆர்.ஆர் படத்தை போன்று இந்திய பொருளாதாரம் சாதனை படைத்து வருகிறது  - பியூஷ் கோயல்
x
தினத்தந்தி 3 April 2022 6:02 PM IST (Updated: 3 April 2022 6:02 PM IST)
t-max-icont-min-icon

ஆர்.ஆர்.ஆர் படத்தை போன்று இந்திய பொருளாதாரம் சாதனை படைத்து வருகிறது என மத்திய மந்திரி பியூஷ் கோயல் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

மத்திய வர்த்தகத்துறை மந்திரி பியூஷ் கோயல் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

இந்திய வரலாற்றில் முதன்முறையாக, கோவிட் அலைகள் இருந்தபோதிலும், இலக்கை விட 5% அதிகமாக, 418 பில்லியன் டாலர் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. மார்ச் மாதத்தில் 40 பில்லியன் டாலர்களைத் தாண்டிய சீரான தன்மை உள்ளது. இதற்கு முன் இதுபோன்று நடக்கவில்லை. 

ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் வசூல் சாதனை படைத்துள்ளது போல், இந்திய பொருளாதாரமும் புதுப்புது சாதனைகளை படைத்து வருகிறது. கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் அதிகபட்சமாக 40 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் ஏற்றுமதி  செய்யப்பட்டுள்ளது என்றார்.

Next Story