ராணுவ தலைமை தளபதி நரவானே மூன்று நாள் சிங்கப்பூர் பயணம்!


ராணுவ தலைமை தளபதி நரவானே மூன்று நாள் சிங்கப்பூர் பயணம்!
x
தினத்தந்தி 3 April 2022 9:06 PM IST (Updated: 3 April 2022 9:06 PM IST)
t-max-icont-min-icon

இந்தியா-சிங்கப்பூர் பாதுகாப்பு உறவுகள் பற்றி அவர்களுடன் ராணுவ தளபதி விவாதிக்க உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

ராணுவ தலைமை தளபதி ஜெனரல் எம்எம் நரவானே, சிங்கப்பூரில் ஏப்ரல் 4 முதல் 6-ந்தேதி வரை மூன்று நாள் பயணம் மேற்கொள்ள உள்ளார். தமது பயணத்தின் போது, அவர் அந்நாட்டு மூத்த ராணுவ அதிகாரிகள் மற்றும் தலைவர்களைச் சந்திக்க உள்ளார்.

பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, ஏப்ரல் 4-ந்தேதி, ஜெனரல் நரவானே, கிராஞ்சி போர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துவார். 

தொடர்ந்து அவர், சிங்கப்பூர் பாதுகாப்பு மந்திரி, ராணுவ தளபதி மற்றும் முக்கிய அதிகாரிகளை சந்திப்பார். மேலும், இந்தியா-சிங்கப்பூர் பாதுகாப்பு உறவுகள் பற்றி அவர்களுடன் ராணுவ தளபதி விவாதிக்க உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாங்கி கடற்படை தளம், இன்போ பியூசன் மையம், பிராந்திய எச்ஏடிஆர் ஒத்துழைப்பு மையம் உள்ளிட்ட பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு அவர் சென்று பார்வையிடுவார்  என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story