பிரபல மலையாள நடிகர் கைனகரி தங்கராஜ் மரணம்..!


பிரபல மலையாள நடிகர் கைனகரி தங்கராஜ் மரணம்..!
x
தினத்தந்தி 4 April 2022 11:08 AM IST (Updated: 4 April 2022 11:08 AM IST)
t-max-icont-min-icon

கைனகரி தங்கராஜுக்கு கல்லீரல் பிரச்சினை காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

கேரளா,

பிரபல மலையாள நடிகர் கைனகரி தங்கராஜ். இவர் கேரள மாநிலம் கொல்லம் அருகில் உள்ள கேரளாபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். நாடகங்களில் நடித்து சினிமாவுக்கு வந்த கைனகரி தங்கராஜ் முதலில் பிரேம் நசீர் நடித்த அனாப்பச்சன் படம் மூலம் நடிகராக அறிமுகமானார்.

தொடர்ந்து 35-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். மோகன்லாலின் லூசிபர் மற்றும் இஷ்க், ஹோம் ஆகிய படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். கடைசியாக மம்முட்டியின் நண்பகல் நேரத்து மயக்கம் படத்தில் நடித்தார். 

இந்நிலையில் கைனகரி தங்கராஜுக்கு கல்லீரல் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி நேற்று மதியம் மரணம் அடைந்தார்.  77 வயதான கைனகரி தங்கராஜ் மறைவுக்கு மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்ட மலையாள நடிகர்கள் பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

Next Story