இலங்கை,பாகிஸ்தான் விவகாரம்: பிரதமர் மோடியுடன் ஜெய்சங்கர் ஆலோசனை


இலங்கை,பாகிஸ்தான் விவகாரம்:  பிரதமர் மோடியுடன் ஜெய்சங்கர் ஆலோசனை
x
தினத்தந்தி 4 April 2022 2:45 PM IST (Updated: 4 April 2022 2:49 PM IST)
t-max-icont-min-icon

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

புதுடெல்லி,

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக எரிபொருள், உணவுப் பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து இலங்கை மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த வாரம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர், அந்நாட்டின் அதிபா் கோத்தபய ராஜபக்சே, பிரதமா் மகிந்த ராஜபக்சே, நிதி மந்திரி பசில் ராஜபக்சே ஆகியோரை சந்தித்து பொருளாதார பிரச்சினை  குறித்து ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த ஜெய்சங்கர், இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் பாகிஸ்தானின் அரசியல் சுழல் குறித்தும் ஆலோசனை நடத்தி வருகிறார்.

முன்னதாக, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் கோரிக்கையை ஏற்று நாடாளுமன்றத்தை கலைப்பதாகவும், மூன்று மாதத்தில் தேர்தல் நடத்தப்படும் எனவும் அந்நாட்டின் அதிபர் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story