அன்று - இன்று பெட்ரோல் உயர்வு குறித்து ராகுல் காந்தி டுவீட்
வெவ்வேறு வாகனங்களில் முழு டேங்க் எரிபொருளை நிரப்ப ஆகும் விலையை ஒப்பிடும் விளக்கப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.
புதுடெல்லி,
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தற்பொழுது உயர்ந்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை விமர்சனம் செய்து தனது டுவிட்டர் பதிவில் கூறியதாவது:-
அதில், 2014 ஆம் ஆண்டு மற்றும் இப்பொழுது வெவ்வேறு வாகனங்களில் முழு டேங்க் எரிபொருளை நிரப்ப ஆகும் விலையை ஒப்பிடும் விளக்கப்படத்தைப் பகிர்ந்துள்ளார். ஒரு பைக்கில் முழு டேங்க் எரிபொருளுக்கு ₹714 செலவாகும், இது இப்போது ₹1,038 ஆக மாறியுள்ளது . 2014ல் காரில் முழு டேங்க் எரிபொருளுக்கு ₹2,856 ஆக இருந்தது, தற்பொழுது ₹4,152 ஆக உயர்ந்திருப்பதை அந்த விளக்கப்படம் குறிக்கிறது.
Pradhan Mantri Jan Dhan LOOT Yojana pic.twitter.com/OQPiV4wXTq
— Rahul Gandhi (@RahulGandhi) April 4, 2022
Related Tags :
Next Story