நாடாளுமன்ற மாநிலங்களவையில் 6 புதிய எம்.பி.க்கள் பதவியேற்பு


நாடாளுமன்ற மாநிலங்களவையில் 6 புதிய எம்.பி.க்கள் பதவியேற்பு
x
தினத்தந்தி 5 April 2022 4:22 AM IST (Updated: 5 April 2022 4:22 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற மாநிலங்களவையில் 6 புதிய எம்.பி.க்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மாநிலங்களவையில் காலியான 13 இடங்களுக்கான தேர்தல் கடந்த மார்ச் 31-ந் தேதி நடைபெற்றது. 

இந்நிலையில், புதிதாக தேர்வான எம்.பி.க்களில் 6 பேர் நேற்று பதவியேற்றுக் கொண்டனர். 

அவர்கள் பவித்ரா மார்கெரிட்டா (பா.ஜ.க., அசாம்), ரிங்வாரா நர்சாரி (ஐக்கிய மக்கள் தாராளவாத கட்சி, அசாம்), ஜெபி மேத்தர் ஹிசாம் (காங்கிரஸ், கேரளா), சந்தோஷ்குமார் (இந்திய கம்யூனிஸ்டு கட்சி, கேரளா), ஏ.ஏ.ரகீம் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி), பாங்னோன் கோன்யாக் (பா.ஜ.க., நாகாலாந்து) ஆகியோர் ஆவர்.

Next Story