கிராமி விருது வென்ற இந்திய-அமெரிக்க பாடகி பால்குனி ஷாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
கிராமி விருது வென்ற இந்திய-அமெரிக்க பாடகி பால்குனி ஷாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார் .
லாஸ் வேகாஸ்,
இசை உலகின் உயரிய விருதாக கருதப்படும் கிராமி விருது வழங்கும் விழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. 2022-ம் ஆண்டுக்கான 64-வது கிராமி விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடந்தது.
இந்த விழாவில், சிறந்த குழந்தைகளுக்கான இசை ஆல்பத்திற்கான கிராமி விருதை, ‘எ கலர்புல் வோர்ல்டு’ ஆல்பத்திற்காக இந்திய-அமெரிக்க பாடகி பால்குனி ஷா பெற்றார்.
சிறந்த குழந்தைகளுக்கான இசை ஆல்பம் பிரிவில் 2 முறை கிராமி விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட இந்தியாவை பூர்வீகமாக கொண்ட ஒரே பெண்மணி, பால்குனி ஷா ஆவார்.
இந்நிலையில் கிராமி விருது வென்ற இந்திய-அமெரிக்க பாடகி பால்குனி ஷாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார் .
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ;
கிராமி விழாவில் சிறந்த குழந்தைகளுக்கான இசை ஆல்பத்திற்கான விருதை வென்ற பால்குனி ஷாவிற்கு வாழ்த்துகள். எதிர்கால முயற்சிகள் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story