மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் குறியீடு 209 புள்ளிகள் சரிவு


மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் குறியீடு 209 புள்ளிகள் சரிவு
x
தினத்தந்தி 5 April 2022 11:14 AM IST (Updated: 5 April 2022 11:14 AM IST)
t-max-icont-min-icon

மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 207.99 புள்ளிகள் சரிந்து 60,403.75 புள்ளிகளாக இருந்தது.






மும்பை,



மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு சரிவை நோக்கி சென்றது.  இதன்படி, காலை 9.50 மணி நிலவரப்படி 207.99 புள்ளிகள் வரை அல்லது 0.34 சதவீதம் அளவுக்கு சரிவடைந்து 60,403.75 புள்ளிகளாக இருந்தது.

இதேபோன்று, தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 52.45 புள்ளிகள் வரை அல்லது 0.29 சதவீதம் அளவுக்கு சரிவு கண்டு 18,000.95 புள்ளிகள் என்ற அளவில் இருந்தது.

எச்.டி.எப்.சி. நிறுவன பங்குகள் 1.66 சதவீதம் அளவுக்கு சரிந்து ரூ.2,634.35 என இருந்தது.  எனினும், எச்.டி.எப்.சி. வங்கி பங்குகள் 2.58 சதவீதம் அளவுக்கு உயர்ந்து ரூ.1,613.65 ஆக இருந்தது.  எச்.டி.எப்.சி. நிறுவனம் மற்றும் எச்.டி.எப்.சி. வங்கி இணைக்கப்படுகின்றன என நேற்று அறிவிக்கப்பட்டது.

இதற்காக கூடிய அவற்றின் வாரிய இயக்குனர்கள் கூட்டத்தில் எச்.டி.எப்.சி. நிறுவனம் மற்றும் எச்.டி.எப்.சி. வங்கி இணைப்புக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.




Next Story